அத்தாணி அருகே கனமழை: மரம் ரோட்டில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

அத்தாணி அருகே கனமழை: மரம்  ரோட்டில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
X

சாலையில் மரம் முறிந்து விழுந்தது கிடப்பதை படத்தில் காணலாம்

அத்தாணி அருகே கரட்டூர்மேடு பகுதியில் பலம் இழந்த மரம் மழை காற்றில் முறிந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து அத்தாணி செல்லும் சாலையில் புளியமரம், வேப்பமரம் என உள்ளது. இதில் 50 வருடம் வரை உள்ள ஏராளமான மரங்கள் உள்ளன. இந்நிலையில், நேற்று இரவு 8:15 மணி முதல் 9:30 மணி வரை காற்றுடன் மழை பெய்தது. கரட்டூர்மேடு பகுதியில் சாலையோரத்தில் இருந்த 50 ஆண்டுகள் உள்ள வேப்பமரம் முறிந்து சாலையில் விழுந்தது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்