ஈரோடு மாவட்டத்தில் நேற்று திடீரென பெய்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

ஈரோடு மாவட்டத்தில் நேற்று திடீரென பெய்த மழை:   பொதுமக்கள் மகிழ்ச்சி
X

பைல் படம்.

ஈரோட்டில் நேற்று திடீரென மழை பெய்தது. வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று பகலில் கடும் வெயில் அடித்தது. இந்த நிலையில் கொடுமுடி , சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் மாலை 6 மணி முதல் 8 மணி வரை தூறல் மழை பெய்தது. பகலில் கடுமையான வெயில் அடித்த போதிலும் மாலையில் பெய்த தூறல் மழை காரணமாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டம் முழுவதும் நேற்று பெய்த மழையின் அளவு விவரம் பின்வருமாறு:-

கொடுமுடி - 1.0 மி.மீ

சத்தியமங்கலம் - 1.0 மி.மீ

மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 2.0 மி.மீ

மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு - 0.1 மி.மீ

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது