ஈரோட்டில் சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுகாதார ஆய்வாளர்கள். 

ஈரோடு திண்டலில் உள்ள துணை இயக்குனர் (சுகாதாரம்) அலுவலகம் முன்பு அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் கூட்டமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு திண்டலில் உள்ள துணை இயக்குனர் (சுகாதாரம்) அலுவலகம் முன்பு, அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் கூட்டமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் ரகு தலைமை தாங்கினார். செயலாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தார்.

இதில், 2020-2021ம் ஆண்டில் கொரோனா தடுப்பு பணிக்காக தற்காலிக சுகாதார ஆய்வாளர்களாக மாநில அளவில் 1,644 பேர் பணி நியமனம் செய்யப்பட்டு, அவர்கள் கொரோனா தொற்று பரவல் நிலையில், முழு அளவிலான பணிகளை மேற்கொண்டனர்.அவர்களை, நவம்பர் 30ம் தேதியுடன் (நேற்றுடன்) பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை வாபஸ் பெற்று, மீண்டும் தற்காலிக சுகாதார ஆய்வாளர்களுக்கு பணி வழங்க கோரியும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
ai future project