ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 28.69 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 28.69 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 28.69 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்திட 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 15 வயது முதல் 18 வயதுக்கு உள்பட்ட சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள், 2 தவணை தடுப்பூசி செலுத்தி 90 நாட்களுக்கு மேலானவர்களுக்கு 3-வது தவணையாக பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.

அதன்படி ஈரோடு மாவட்டம் முழுவதும் தற்போது வரை முதல் தவணை தடுப்பூசியினை 89.86 சதவீதம் பேர், அதாவது 16 லட்சத்து 25 ஆயிரத்து 595 பேரும், 2-வது தவணையினை 68.78 சதவீதம் பேரும், அதாவது 12 லட்சத்து 44 ஆயிரத்து 236 பேரும் செலுத்தி கொண்டுள்ளனர்.மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 28 லட்சத்து 69 ஆயிரத்து 831 டோஸ் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா