பவானியில் நெசவாளர் கோரிக்கையை வலியுறுத்தி ஏஐடியுசி சார்பில் ஆர்ப்பாட்டம்.
ஈரோடு மாவட்டம் பவானி அந்தியூர் பிரிவில் ஏஐடியுசி சங்கத்தின் பவானி வட்டார கைத்தறி ஜமக்காள சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சங்க தலைவர் கந்தசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி மாநில செயலாளர் சின்னசாமி, சங்கத்தின் செயலாளர் சித்தையன் உள்ளிட்டோர் பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைத்தறி நெசவாளர்களின் நெசவுத் தொழிலை கடுமையாகப் பாதிக்கும் நூல்விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், 28 ஆண்டுகளாக மாற்றி அமைக்கப்படாமல் உள்ள கைத்தறி நெசவாளர்களின் அடிப்படை ஊதியத்தை உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும்.
மேலும், காப்புரிமை பெற்றுள்ள பவானி கைத்தறி ஜமக்காள நெசவுத் தொழிலை அழித்துவரும் சட்டவிரோத சோலாப்பூர் விசைத்தறி ஜமக்காளங்களை தடுக்க வேண்டும், கைத்தறி ஜவுளிகளுக்கான ஜிஎஸ்டி வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்; குறைந்த பட்ச ஜிஎஸ்டியை 8% ஆக உயர்த்தும் திட்டத்தை கைவிட வேண்டும், கைத்தறி துறைக்கு தனூ அமைச்சகத்தை உருவாக்கி கைத்தறி தொழிலை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பட்டது ஆர்ப்பாட்டத்தின் நிறைவில், தமிழ்நாடு முதலமைச்சருக்கு, பவானி வட்டாட்சியர் ஜி.முத்துகிருஷ்ணன் மூலம் கோரிக்கை மனு சமர்பிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu