பவானி: லட்சுமி நகரில் 500 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார்

பவானி: லட்சுமி நகரில் 500 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார்
X

500 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்ட போது எடுத்த படம்

பவானி அருகே லட்சுமி நகர் தேசிய நெடுஞ்சாலையில், காரில் கடத்த முயன்ற 500 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள சித்தோடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட லட்சுமி நகர் சோதனைச்சாவடியில், போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது ஓசூரில் இருந்து திருப்பூர் நோக்கி, சென்று கொண்டிருந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

இதில், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மாதேசன் என்பவர் ஓசூரில் இருந்து திருப்பூருக்கு 500 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து சட்டவிரோதமாக குட்கா பொருட்களை கொண்டு சென்ற ஓட்டுநர் மாதேசன் மீது சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து, வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களின் மதிப்பு 3 லட்சம் ரூபாய் இருக்கக்கூடும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி