அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் விழா ஆலோசனைக் கூட்டம்

ஈரோடு மாவட்டம் அந்தியூரில், மிகவும் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக, குண்டம் திருவிழா ரத்து செய்யப்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதால், பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா நடத்த இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்தது.
இதையடுத்து, இன்று காலை, பத்ரகாளியம்மன் கோவில் அன்னதான அரங்கில், பங்குனி குண்டம் திருவிழா நடத்துவது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம், அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், அந்தியூர் வட்டாட்சியர் விஜயகுமார், செயல் அலுவலர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கோபி ஆர்டிஓ பழனிதேவி தலைமை தாங்கி, கோவில் மிராசுதாரர்கள் மத்தியில் ஆலோசனை நடத்தினார். அப்போது கோவில் பண்டிகைக்கான பூச்சாட்டுதல் மார்ச் 17ஆம் தேதியும், குண்டம் திருவிழா ஏப்ரல் 6ஆம் தேதியும், தேர்த்திருவிழா ஏப்ரல் 6-ம் தேதியில் இருந்து 11ம் தேதி வரையிலும் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
குண்டம் திருவிழாவின்போது பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் எனவும், பாதுகாப்பு ஏற்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோபி ஆர்டிஓ பழனிதேவி கேட்டுக் கொண்டார். இதில், இந்து சமய அறநிலையத் துறை வருவாய்த்துறை காவல் துறை தீயணைப்புத் துறை உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu