நவ. 1ல் பள்ளிகள் திறப்பு: வகுப்பறைகளில் தூய்மைப்பணி தீவிரம்
பள்ளி வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில், பள்ளிகளை திறப்பதற்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ,மாணவியர் நேரடியாக கல்வி கற்க வசதியாக நவம்பர் 1ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதையொட்டி அரசு, தனியார் பள்ளிகள் ஆயத்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
பள்ளி வளாகத்தில் வளர்ந்துள்ள செடி,கொடிகள், புற்களை வெட்டி அகற்றுவது, கழிவறையை சுத்தம் செய்தல், வகுப்பறையில் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. ஈரோடு அரசு மாதிரி மகளிர் மேல்நிலை பள்ளியில் வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதேபோல் பல்வேறு பள்ளிகளிலும் ஆயத்த பணி தீவிரமாகி உள்ளது. உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவிகள் வந்து செல்கின்றனர். எனவே, துவக்க மற்றும் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மட்டும், கொரோனா வழிகாட்டு நெறிமுறை குறித்து பள்ளி கல்வி துறை அறிவுறுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu