அந்தியூர் விற்பனை கூடத்தில் ரூ.5.11 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

அந்தியூர் விற்பனை கூடத்தில் ரூ.5.11 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை
X

பைல் படம்

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் ஐந்து லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கு நிலக்கடலை விற்பனை செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில், செம்புளிச்சாம்பாளையம், பச்சாம்பாளையம், பள்ளிபாளையம் பருவாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த விவசாயிகள், 239 மூட்டைகள் காய்ந்த நிலக்கடலை காய் விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

இதில் ஒரு கிலோ நிலக்கடலை குறைந்தபட்சமாக 62 ரூபாய் 19 பைசாவிற்கும் , அதிகபட்சமாக 70 ரூபாய் 07 பைசாவிற்கும் ஏலம் போனது.நேற்றைய வர்த்தகத்தில் 82.31 குவிண்டால் நிலக்கடலை கொண்டு வரப்பட்ட நிலையில், மொத்தம் ஐந்து லட்சத்து 10 ஆயிரத்து 695 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக விற்பனைக்கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!