அந்தியூர் விற்பனை கூடத்தில் ரூ.1.30 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

அந்தியூர் விற்பனை கூடத்தில் ரூ.1.30 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை
X
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில், 1 லட்சத்து 29ஆயிரம் ரூபாய்க்கு நிலக்கடலை விற்பனை செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இன்று நடைபெற்ற ஏலத்தில், 61 மூட்டைகள் நிலக்கடலை காய் கொண்டு வரப்பட்டது. இதில் குறைந்த பட்சமாக 60 ரூபாய் 73 பைசாவிற்கும், அதிகபட்சமாக 70 ரூபாய்க்கும், சராசரியாக 64 ரூபாய் 19 பைசாவிற்கும் ஏலம் போனது.

இன்றைய, வர்த்தகத்தில், 19.83 குவின்டால் நிலக்கடலை கொண்டு வரப்பட்ட நிலையில், மொத்தம் 1 லட்சத்து 29 ஆயிரத்து 774 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது என விற்பனைக்கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!