பவானி அருகே மளிகைக்கடை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

பவானி அருகே மளிகைக்கடை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்

பவானியில் மளிகைக்கடை தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பவானி கோட்டைநகர் செங்காடு பகுதியை சேர்ந்த மான்அருள்ராஜ் (வயது 47). மளிகை கடையில் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஜெயக்கொடி என்ற மனைவியும், ஷாலினி , சௌமியா , அர்ச்சனா 3 மகள்கள் மற்றும் தனுஷ் என்ற மகனும் உள்ளனர். அருள்ராஜுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால், உடல்நலம் பாதிக்கப்பட்டதால், கடந்த 2 நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பவானி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே மான்அருள்ராஜ் இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்