ஈரோடு மாவட்ட ரேஷன் கடைகளில் நாளை குறை தீர் நாள் கூட்டம்

ஈரோடு மாவட்ட ரேஷன் கடைகளில் நாளை  குறை தீர் நாள் கூட்டம்
X

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாவிலும், நாளை (சனிக்கிழமை) ரேஷன் கடைகளில் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாக்களிலும், நாளை(சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சம்பந்தமாக, பொதுமக்களின் குறை தீர்க்கும் கூட்டங்கள் நடக்கிறது. இக்கூட்டங்களை சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னின்று நடத்துகின்றனர். அதன்படி ஈரோடு தாலுகாவில் சித்தோடு ரேஷன் கடையிலும், பெருந்துறை தாலுகாவில் பெருந்துறை 1-ம் எண் ரேஷன் கடையிலும், மொடக்குறிச்சி தாலுகாவில் நஞ்சப்பன்கவுண்டன்புதூர் ரேஷன் கடையிலும், கொடுமுடி தாலுகாவில் இச்சிபாளையம் ரேஷன் கடையிலும், கோபி தாலுகாவில் பங்களாப்புதூர் ரேஷன் கடையிலும் குறைதீர் முகாம் நடக்கிறது.

மேலும் நம்பியூர் தாலுகாவில் கோசனம் ரேஷன் கடையிலும், பவானி தாலுகாவில் சின்ன புலியூர் ரேஷன் கடையிலும், அந்தியூர் தாலுகாவில் ஓசைப்பட்டி ரேஷன் கடையிலும், சத்தி தாலுகாவில் கரளயம் ரேஷன் கடையிலும், தாளவாடி தாலுகாவில் கெத்தேசால் ரேஷன் கடையிலும் பொது வினியோக திட்ட குறைதீர் முகாம் நடைபெறுகிறது. முகாமில் புதிய ரேஷன் கார்டு மனுக்கள் பெறுதல், நகல் ரேஷன் கார்டு, ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், செல்போன் எண் மாற்றம் போன்ற கோரிக்கைகளை பொதுமக்கள் மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!