ஈரோட்டில் டிச.6ல் மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம்
மின்வாரிய குறைதீர்க்கும் முகாம் (பைல் படம்).
Grievance meeting of Electricity users on Dec. 6 in Erode | ஈரோட்டில் மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 6ம் தேதி (வியாழக்கிழமை) நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.
ஈரோடு ஈ.வி.என். சாலையில் உள்ள ஈரோடு நகரியம் மின் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டம் ஈரோடு மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது.
எனவே இந்த கூட்டத்தில் ஈரோடு நகர் முழுவதும் சேர்ந்த மற்றும் கருங்கல்பாளையம், மரப்பாலம், சூரம்பட்டி, ரங்கம்பாளையம், வீரப்பன்சத்திரம், சம்பத் நகர், திண்டல், அக்ரஹாரம், மேட்டுக்கடை, சித்தோடு, கவுந்தப்பாடி ஆகிய பகுதிகளை சேர்ந்த மின் பயனீட்டாளர்கள் பங்கேற்று மின்சாரம் சார்ந்த குறைகளை மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவித்து நிவர்த்தி பெறலாம் என மின் வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu