நம்பியூர் அருகே மூதாட்டியின் புடவையில் தீ: சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு‌

நம்பியூர் அருகே மூதாட்டியின் புடவையில் தீ: சிகிச்சை பலனின்றி  உயிரிழப்பு‌
X

சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கருப்பாயாள்.

நம்பியூர் அருகே மண்ணெண்ணெய் விளக்கிலிருந்து புடவையில் தீப்பிடித்ததால் சிகிச்சை பெற்றுவந்த மூதாட்டி உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அடுத்த நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் செட்டிபாளையத்தை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மனைவி கருப்பாயாள் .

இவர் வீட்டில் இருந்த போது, எதிர்பாராத விதமாக கருப்பாயாளின் புடவையில் தீபற்றியது. தீ கருப்பாயாளின் உடலில் பற்றி எரியவே, அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்-பக்கத்தினர் மீட்டு கருப்பாயாளை கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கருப்பாயாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, கருப்பாயாளின் மகன் முருகேசன் அளித்த புகாரில் பேரில் கடத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture