பவானி சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் மூதாட்டி சாவு: போலீசார் விசாரணை

பவானி சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் மூதாட்டி சாவு: போலீசார் விசாரணை
X

பைல் படம்.

பவானி சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் பிச்சை எடுத்த மூதாட்டி உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

ஈரோடு மாவட்டம், பவானி ஸ்ரீ சங்கமேஸ்வரர் கோயில் வளாகத்தில் ராசம்மாள் (வயது 60). சில நாட்களாக பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்.

இவர் கடந்த மாதம் 10-ந் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், கடந்த 3-ந் தேதி சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதுகுறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு