டி.என்.பாளையம் அருகே சாலை விபத்தில் மூதாட்டி உடல் நசுங்கி உயிரிழப்பு

டி.என்.பாளையம் அருகே சாலை விபத்தில் மூதாட்டி உடல் நசுங்கி உயிரிழப்பு
X

பைல் படம்

கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு வேன் மோதியதில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகேயுள்ள பங்களாப்புதூர் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி மனைவி தங்கமணி (எ) வசந்தாமணி (60), கொங்கர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி சாமி கவுண்டர் (75) இருவரும் உறவினர்கள் ஆவர், இந்நிலையில் நேற்று இரவு இருவரும் மோட்டார் சைக்கிளில் அத்தாணி- சத்தியமங்கலம் மெயின் சாலையில் டி.என்.பாளையம் அருகேயுள்ள வெற்றிவேல் என்பவரது பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பி விட்டு மெயின் சாலையை இடது புறம் கவனிக்காமல் கடக்க முயன்றதாக கூறப்படுகிறது.அப்போது அத்தாணி- சத்தியமங்கலம் சாலையில் இருந்து சேலம் மாவட்டம் ஓமலூர் கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த பிரதீப் என்பவர் ஓட்டி வந்த பிக்கப் வேன் நேராக வந்து மோதியதில் மோட்டார் சைக்கிளில் பின்புறம் அமர்ந்து இருந்த வசந்தாமணி, வேனின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வசந்தாமணியின் உறவினர் சுப்பிரமணி இரத்த காயங்களுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பங்களாப்புதூர் போலீசார் உடல் நசுங்கி பலியான வசந்தாமணியின் உடலை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இச்சம்பவம் குறித்து ஓட்டுனர் மீது பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சுப்பிரமணி சாமி கவுண்டர் தற்போது கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவம் நடந்த இடத்திலே இதுபோன்ற வாகன விபத்து அடிக்கடி நடைபெறுகிறது, அதே போன்று விபத்து நடந்த இடத்தில் முதலுதவி செய்ய முன்வராத சிலர் போட்டோ வீடியோ எடுப்பதிலேயே மும்மரமாக இருந்ததாக போலீசார் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது