பெருந்துறை அருகே கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை

பெருந்துறை அருகே கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை
X

கிணற்றில் விழுந்த மூதாட்டியை மீட்க்கும் தீயணைப்பு துறையினர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள ஆர் எஸ், கொளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த துளசிமணி என்பவரது மனைவி பாப்பாயி (வயது 90). கணவனை இழந்த இவர், தனது வீட்டு தோட்டத்தில் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு உதவியாக இவரது தம்பி இருந்து வந்த தம்பி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துபோனார். தம்பி இறந்த துக்கம் தாளாமல் மன உளைச்சலுடன் இருந்து வந்த இவர், நேற்று வீட்டின் பின்பகுதியில் உள்ள சுமார் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் இருந்த 10 அடி தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பாக, அக்கம்பக்கத்தினர் பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலைய அலுவலர் ரவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒருமணி நேரம் போராடி, கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி மூதாட்டியின் சடலத்தை மீட்டு, வெளியே கொண்டு வந்தனர். இதுதொடர்பாக வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!