பவானியில் கொரோனா அச்சம் காரணமாக மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை

பவானியில் கொரோனா அச்சம் காரணமாக மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை
X

லட்சுமி.

பவானியில் கொரோனா தொற்று உறுதியான மூதாட்டி அச்சம் காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம், பவானி திருநீலகண்டர் வீதியை சேர்ந்தவர் லட்சுமி. மூதாட்டியான இவர் கணவர் இறந்த நிலையில் தனிமையில் வசித்து வருகிறார். இதையடுத்து கடந்த சில தினங்களாக காய்ச்சல் சளி அறிகுறிகள் காரணமாக நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்துள்ளார்.

இதன் முடிவுகள் இன்று வெளியான நிலையில், அதில் மூதாட்டி லட்சுமிக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து மனமுடைந்த மூதாட்டி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதன் பின்னர் அருகில் இருப்பவர்கள் அவரை பார்க்க சென்றபோது சடலமாக தொங்கியதை பார்த்த அப்பகுதியினர் பவானி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூதாட்டி உடலை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!