ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று 225 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்

ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று 225 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்
X

பைல் படம்.

Grama Sabha Meeting - ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தினத்தையொட்டி 225 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.

Grama Sabha Meeting - ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225 கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினமான நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பகல் 11 மணிக்கு கிராமசபை கூட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த கூட்டத்தின்போது டெங்கு காய்ச்சல் தடுப்பு, தனிநபர் சுகாதாரம் மற்றும் சுற்றுப்புற தூய்மை, பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை, நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றுதல், தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இந்த கூட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கலந்து கொள்வது முக்கிய கடமை ஆகும். மேலும் கிராமசபை கூட்டத்தில் நடைபெறும் விவாதத்தில் பங்கேற்று, அரசின் திட்டங்களை தெரிந்து கொள்ள வேண்டும். எனவே ஊராட்சிகளில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துகளை தெரிவிக்கலாம்.

மேலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் அரசு அலுவலக கட்டிடங்களிலும், இன்று முதல் (சனிக்கிழமை) நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வரை தேசியக்கொடி பறக்கவிட வேண்டும். நாளை மறுநாள் ஊராட்சி அலுவலகங்களில் ஊராட்சி தலைவர்கள் மட்டுமே தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும். வேறு எவரேனும் தேசியக்கொடி ஏற்றுவதாக குழப்பம் விளைவித்தாலோ, தேசியக்கொடியை அவமதித்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக புகார்களை 0424 2260087 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil