காதலித்த பெண் பேச மறுத்ததால் பட்டதாரி வாலிபர் தற்கொலை

காதலித்த பெண் பேச மறுத்ததால் பட்டதாரி வாலிபர் தற்கொலை
X

பைல் படம்.

சித்தோடு அருகே காதலித்த பெண் பேச மறுத்ததால் எம்பிஏ பட்டதாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சித்தோடு, குமிளம்பரப்பு நல்லகவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி பத்மாவதி. இவர்களுக்கு கோபாலகிருஷ்ணன் என்ற மகனும், நிவேதா என்ற மகளும் உள்ளனர்.இதில் கோபால கிருஷ்ணன் எம்.பி.ஏ. படித்து விட்டு பெயிண்டராக கோவையில் தங்கி வேலை பார்த்து வந்தார். வாரம் ஒரு முறை மட்டுமே கோவையிலிருந்து சித்தோடு வந்து செல்வார். இந்நிலையில் சேகரின் உறவினர்கள் போன் செய்து கோபாலகிருஷ்ணன் சித்தோடு பேட்டைகாடு, முதலியார் வீதியிலுள்ள ஒரு வாடகை வீட்டில் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதாக தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடம் சென்ற சேகர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே கோபாலகிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தந்தை சேகர் சித்தோடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் போரில் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் - முதற்கட்ட விசாரணையில் கோபால கிருஷ்ணன் காதலித்து வந்த பெண் பேசாததால் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!