கருங்கல்பாளையம் அருகே அரசு பேருந்துகள் மோதல்

கருங்கல்பாளையம் அருகே அரசு பேருந்துகள் மோதல்
X

விபத்துக்குள்ளான அரசு பேருந்துகள்

நகரப்பேருந்து முன்பு திடீரென நாய் குறுக்கே வந்ததாக திடீரென பிரேக்க் போட்டதால் பின்னால் வந்த கோவை-சேலம் அரசு பேருந்து நகரப் பேருந்து மீது மோதியது.

ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து இன்று காலை கோவை-சேலம் செல்லும் அரசு பேருந்து ஒன்று 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கருங்கல்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தது. பேருந்தை குமரபாளையம் உத்திரசாமி (வயது 57) என்பவர் ஓட்டி சென்றார். அதில் நடத்துனராக காஞ்சிகோவில் மூர்த்தி என்பவர் பணியாற்றினார்.

இதேபோல் ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து திருச்செங்கோடு செல்லும் நகரப் பேருந்தை திருச்செங்கோடை சேர்ந்த மாணிக்கம் (55) என்பவர் ஓட்டி சென்றார். இதில் நடத்துனராக நாமக்கல்லை சேர்ந்த ரவிச்சந்திரன் பணியாற்றினார்.

இந்த இரு அரசு பேருந்துகளும் ஒன்றன் பின் ஒன்றாக கலுங்கல்பளையம் சோதனை சாவடி காலிங்கராயன் வாய்க்கால் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது நகரப் பேருந்து முன்பு திடீரென நாய் குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது. இதனால் டிரைவர் மாணிக்கம் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதனால் பின்னால் வந்த கோவை-சேலம் அரசு பேருந்து நகரப் பேருந்தின் பின்புறம் மோதியது.

இதில் நகரப் பேருந்தின் பின்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து சேதமானது. கோவை பேருந்தின் முன்பக்கம் முழுவதும் சேதமடைந்தது. இந்த விபத்தில் கோவை-சேலம் பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு மட்டும் காயம் ஏற்பட்டது. மற்ற பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.

இந்த விபத்து குறித்து கருங்கல்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்