ஈரோடு வழியாக வந்த ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த அரசு ஊழியர்

ஈரோடு வழியாக வந்த ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த அரசு ஊழியர்
X

கைது செய்யப்பட்ட ஜிம்ரீஸ் ராஜ்குமார்.

ஈரோடு வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு ஊழியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஈரோடு வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு ஊழியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னைக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்று கொண்டிருந்தார். அவர் பயணம் செய்த எதிர் இருக்கையில் நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் அருள் நகரைச் சேர்ந்த ஜிம்ரிஸ் ராஜ்குமார் (வயது 45) என்பவர் பயணம் செய்துள்ளார். இவர், நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், இந்த ரயில் ஈரோடு ரயில் நிலையத்திற்கு வந்தபோது, ரயில்வே காவல் நிலையத்திற்கு கணவருடன் சென்ற அந்த பெண், பாலியல் ரீதியாக ஜிம்ரிஸ் ராஜ்குமார் தொல்லை அளித்ததாக புகாா் அளித்தாா். இதன்பேரில் ஈரோடு ரயில்வே போலீசார் சம்பந்தப்பட்ட பெட்டிக்கு சென்று ஜிம்ரிஸ் ராஜ்குமாரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனா். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. அந்த பெண்ணுக்கு அவா் பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜிம்ரீஸ் ராஜ்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபியில் உள்ள மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர். ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு ஊழியர் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
ai products for business