ஈரோட்டில் அரசு பள்ளிகளில் ஆண்டு விழா

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வீரப்பன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழாவில் மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ் குத்துவிளக்கேற்றினார்.
Government School Annual Day
ஈரோட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வீரப்பன்சத்திரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், வட்டார கல்வி அலுவலர் பாரதி பிரபு முன்னிலை வகித்தார். தலைமையாசிரியைகள் கோமதி, ஜெயந்தி, மாநகராட்சி கவுன்சிலர் வனிதாமணி ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர்.
பள்ளியின் பராமரிப்புக்கு முன்னாள் மாணவர்கள் தங்கமுத்து, மஞ்சள் அரிமா சங்க ஈஸ்வரன், மாதவன் ஆகியோர் பங்கேற்று நன்கொடை வழங்கினர். தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கும், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக பள்ளியின் ஆசிரியை வளர்மதி வரவேற்றார். நிகழ்ச்சியில், ஆசிரியை, ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், அவர்களது பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், ப்ரீத்தா ரீட்டா நன்றி கூறினார்.
இதேபோல், ஈரோடு மாநகராட்சி ஈபிபி நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் தலைமையாசிரியை தமிழ்செல்வி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் விஸ்வநாதன் முன்னிலை வித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ் பங்கேற்று வாழ்த்தி பேசினார். தொடர்ந்து, மாணவ-மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
இதையடுத்து பள்ளியில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும், தேசிய அளவிலான எறிபந்து போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்கள் கவின், ரக்சித் இருவரும் கவுரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில், பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் வினோத்குமார், பள்ளியின் ஆசிரியை, ஆசிரியர்கள், இல்லம் தேடி தன்னார்வலர்கள், மாணவ-மாணவிகள், அவர்களது பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu