ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜாக்டோ ஜியோ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்: இன்று விடுமுறை எடுத்து கலந்து கொண்ட அரசு ஊழியர்கள்!

ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜாக்டோ ஜியோ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்: இன்று விடுமுறை எடுத்து கலந்து கொண்ட அரசு ஊழியர்கள்!
X

ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (பிப்.25) நடந்த ஜாக்டோ ஜியோ சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் விடுமுறை எடுத்து கலந்து கொண்டனர்.

ஈரோடு மாவட்டம் ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டோ-ஜியோ) சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழக அரசு தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஆகியவற்றை ஒப்படைக்க வேண்டும்.


தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலாக உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினை சேர்ந்த அரசு ஊழியர்கள் தரையில் அமர்ந்தபடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான அரசு ஊழியர்கள் மற்றும் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் இன்று விடுமுறை எடுத்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Next Story
Similar Posts
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் தூய்மை பணி தீவிரம்
கோபி அருகே காசிபாளையத்தில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு முகாம்
மும்மொழி கல்வி கொள்கையை கண்டித்து ஈரோட்டில் தி.மு.க. மாணவர் அணி ஆர்ப்பாட்டம்
வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததால் மாநகராட்சி பில் கலெக்டர் மீீது புகார்!
கோடைகாலம் தொடங்கும் முன்பே ஈரோட்டில் கொளுத்திய வெயில் : 100 டிகிரி பதிவு...மக்கள் கடும் அவதி!
ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜாக்டோ ஜியோ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்: இன்று விடுமுறை எடுத்து கலந்து கொண்ட அரசு ஊழியர்கள்!
மகா சிவராத்திரியை முன்னிட்டு, ஈரோட்டில் மஞ்சள் வா்த்தகத்துக்கு பிப். 27-ல் விடுமுறை
பா்கூா் ஊராட்சி மலைக் கிராமங்களில் குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புப் பணிகள் தொடக்கம்
அரியப்பம்பாளையத்தில் முதல்வர் மருந்தகம் திறப்பு விழா!
சட்டவிரோத மது விற்பனை; 5 பேர் கைது..!
நாமகிரிப்பேட்டை ஒன்றிய பா.ஜ., புதிய நிர்வாகிகள் தேர்வு
பாத்ரூமில் மொபைல் பயன்படுத்துவது வலிமிகுந்த நோய்களைக் கொண்டு வருகிறது – மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்
ராசிபுரம் 6 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறப்பு
வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததால் மாநகராட்சி பில் கலெக்டர் மீீது புகார்!