அந்தியூர் அருகே பர்கூர் வனப்பகுதி சாலை சேற்றில் சிக்கிய அரசு பேருந்து
அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி வனச்சாலை சேற்றில் சிக்கிய அரசு பேருந்து நகர முடியாமல் நின்றது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைக் கிராமத்தில் 34 குக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராம பகுதிகளுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது.
மேற்கு மலை, கிழக்கு மலை என இரு பிரிவுகளாக உள்ள மலைப்பகுதிகளில் மேற்கு மலைப் பகுதிகளுக்கு மினி பேருந்துகள் கொங்காடை வரை இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல், கிழக்கு மலை பகுதிகளுக்கு மடம் வரை செல்லக்கூடிய பேருந்துகள் செல்லக்கூடிய பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இதனிடையே, அந்தியூர் மற்றும் பர்கூர், தாளக்கடை, தட்டக்கரை உள்ளிட்ட மலை பகுதிகளிலும் 2 தினங்களாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால், வனச்சாலைகள் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளித்து வருகிறது.
இந்நிலையில், மடத்தில் தேவர்மலை, இருட்டி வழியாக அந்தியூர் நோக்கி ஒரு அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது,ஈரொட்டி பகுதியில் வனச்சாலையில் வந்தபோது, பேருந்து திடீரென சேற்றில் சிக்கி நகர முடியாமல் நின்றது.
இதையடுத்து, தகவலறிந்து வந்த அரசு போக்குவரத்துக் கழக அந்தியூர் கிளை மேலாளர் ரமேஷ் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பவானி கோட்ட பொறியாளர் ராஜேஷ் கண்ணா, உதவி பொறியாளர் பாபு சரவணன், சாலை ஆய்வாளர் கிருஷ்ணசாமி உள்பட பலர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
இதையடுத்து, ஜேசிபி இயந்திரம் கொண்டு வரப்பட்டு அந்த இயந்திரத்தின் மூலம் ரோப் கட்டி இழுக்கப்பட்டது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக சிரமப்பட்டு பேருந்தை மேலே கொண்டு வரப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu