அந்தியூரில் தவறவிட்ட பையினை உரியவரிடம் ஒப்படைத்த அரசு பஸ் கண்டக்டர்
ஈரோடு மாவட்டம், அந்தியூர் பஸ் நிலையத்தில் இருந்து கவுந்தப்பாடி செல்லும் அரசு பேருந்து கே2 கவுந்தப்பாடி நோக்கி வந்தது. அப்போது தவிட்டுப்பாளையம் பூக்கடைகார்னர் பேருந்து நிறுத்தத்தில் தவிட்டுப்பாளையம் நஞ்சப்பா வீதி பகுதியைச் சேர்ந்த பொன்னுத்தாயி (வயது 65) என்ற பெண் கையில் 2 பைகளுடன் ஏறினார்.
அவர் தவிட்டுபாளையம் அரசுப்பள்ளி பஸ் நிறுத்தம் வந்தவுடன், கையில் வைத்திருந்த பையுடன் இறங்கிவிட்டடார். அப்போது மற்றொரு கையில் வைத்திருந்த பணம் ஆயிரம் ரூபாயும், குடும்ப அட்டையும் கொண்ட பையினை பேருந்தில் தவறி விட்டு விட்டார்.
இறங்கி சிறிது தூரம் சென்றவுடன் தான் மற்றொரு கையில் வைத்திருந்த பையானது காணவில்லை என்பதை அறிந்து பதட்டம் அடைந்தார். இதனை அடுத்து அந்த பேருந்து மீண்டும் எப்போது வரும் என்று பேருந்து நிலையத்தில் உள்ள கடைக்காரரிடம் கேட்டுத் தெரிந்து பேருந்து வரும் வரை காத்திருந்தார்.
இந்தநிலையில் கண்டக்டர் ராஜசேகர் (வயது 45) அந்த பர்சை எடுத்து பத்திரமாக வைத்திருந்தார். உடனடியாக டிரைவரிடமும் இதுகுறித்து ராஜசேகர் தெரிவித்துள்ளார்.
அந்தியூர் பேருந்து நிலையம் வந்தவுடன் போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் ஒப்படைத்து விடலாம் என்று முடிவு செய்தனர். இந்தநிலையில் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பொன்னுத்தாயிடம் அந்தப் பையினை கண்டக்டர் ராஜசேகர் ஒப்படைத்தார்.
இதனால் பையினை பெற்றுக்கொண்ட அந்த பெண் நிம்மதியுடன் வீடு திரும்பிச் சென்றார். கண்டக்டரின் இந்த செயலை பேருந்தில் வந்த பயணிகள் பாராட்டினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu