ஆம்புலன்ஸ் மீது அரசு பேருந்து மோதி விபத்து

ஆம்புலன்ஸ் மீது அரசு பேருந்து மோதி விபத்து
X

விபத்திற்குள்ளான பேருந்து.

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை முன்பு இன்று அதிகாலை ஆம்புலன்ஸ் மீது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.

ஈரோடு என்ஜின் காலனி பகுதியை சேர்ந்தவர் செய்யது பாட்ஷா‌. தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர். இவர் நேற்று இரவு, தனது ஆம்புலன்சை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு எதிரே நிறுத்தி விட்டு ஆம்புலன்ஸ் உள்ளே உறங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கு மதுரையிலிருந்து ஈரோடு வழியாக காங்கேயம் நோக்கி, வந்த அரசு பேருந்தை பூபாண்டி என்பவர் ஓட்டி வந்தார்.

அப்போது, ஈரோடு அரசு மருத்துவமனை எதிரே பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, செய்யது பாட்சாவின் ஆம்புலன்ஸ் மீது மோதியது.இதில் படுகாயமடைந்த செய்யது பாட்ஷா‌, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!