கோபி கல்லூரி மாணவிகள் தேசிய கபாடி போட்டிக்கு தேர்வு

கோபி  கல்லூரி மாணவிகள் தேசிய கபாடி போட்டிக்கு தேர்வு
X

பைல் படம்.

கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள பி.கே.ஆர் மகளிர் கல்லூரி மாணவிகள் தேசிய கபாடி போட்டிக்கு தேர்வு.

அரியானா மாநிலத்தில் வருகிற பிப்ரவரி மாதம் தேசிய அளவிலான கேலோ இந்தியா கபாடி விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. இதையொட்டி சென்னை உள் விளையாட்டு அரங்கில் - விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு கபாடி கழகம் மூலம் 18 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

மாணவிகள் பிரிவில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரி மாணவிகள் வைதேகி, சுவேதா ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். இதையொட்டி அந்த 2 மாணவிகளை கல்லூரி தாளாளர் பி.என்.வெங்கடாசலம், முதன்மை நிர்வாக அலுவலர் ஜெகதா லட்சுமணன், முதல்வர் மைதிலி, பேராசிரியர்கள், அலுவலர்கள், உடற்கல்வி இயக்குநர் சங்கீதமுத்து, பயிற்சியாளர்கள், எஸ்.பி.பழனிச்சாமி, கிருஷ்ண வேணி உள்பட பலர் வாழ்த்தி பாராட்டினர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!