ஈரோடு மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
X

ஈரோடு மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் இன்று தொடங்கியது; அமைச்சர் பங்கேற்பு

ஈரோடு மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் கால்நடைகளை கோமாரி நோய் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2-வது சற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணியின் தொடக்க விழா, ஈரோடு பெரியசடையம்பாளையத்தில் இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழக வீட்டு வசதி மற்றும் நகரப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணியினை தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஈரோடு மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 2 லட்சத்து 80ஆயிரம் கால்நடைகள் உள்ளன. இதில், 4 மாதங்களுக்கு மேல் உள்ள கன்றுகளுக்கும், சினை மாடுகளுக்கும் அதாவது நிறைமாத சினை மாடுகளை தவிர அனைத்து பசுவினம். எருமையின மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி 2.வது சுற்று போடும் பணி இன்று தொடங்கியுள்ளது. இந்த தடுப்பூசியானது வரும் 21 நாட்கள் அதாவது 30ம் தேதி வரை போடப்படும். இந்த தடுப்பூசி போடும் பணிகளுக்காக கால்நடை உதவி மருத்துவர்கள் தலைமையில் 96குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கால்நடைகளை தாக்கும் நோய்களில், அதிக பாதிப்பை ஏற்படுத்தும் நோயாக கோமாரி நோய் இருந்து வருகிறது. இந்நிலையில் கோமாரிநோய் தாக்குதலில் இருந்து கால்நடைகளைப் காக்கும் பொருட்டு, கோமாரி நோய் தடுப்பு முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஈரோட்டில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் இன்று தொடங்கியது. கோமாரி நோய் தடுப்பூசி கோமாரி நோய் தடுப்பூசி பணிகளுக்காக ஈரோடு மாவட்டம் முழுவதும் 96 கால்நடை மருத்துவர்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் , 2.80 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளதாக கால்நடை பராமரிப்பு துறை தெரிவித்துள்ளது. ஒவ்வொரு குழுவிலும் ஒரு கால்நடை மருத்துவர் லைவ் ஸ்டார் மேன் என்று சொல்லப்படும் கால்நடை ஆய்வாளர், பராமரிப்பு உதவியாளர் ஆகியோர் இடம் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


வேலம்பாளையம் காட்டுவலசு பகுதிகளில் கோமாரி நோய் தடுப்பூசி முகாமில் மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கோமாரிநோய் தடுப்பு முகாம்கள் நடத்தப்படும் எனவும், காலை 6 மணி முதல் காலை 9 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் தடுப்பு ஊசிகள் போடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நடைபெறும் கோமாரி நோய் தடுப்பு முகாம்களில் கலந்து கொண்டு, விவசாயிகள் தங்கள் கால்நடைகளை பாதுகாக்குமாறு கால்நடை பாதுகாப்பு துறை சார்பாக கேட்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும் என ஈரோடு மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை அறிவித்துள்ளது.இந்த தடுப்பூசி முகாம் 21 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெற்ற உள்ளது.

Tags

Next Story
ai automation in agriculture