ஈரோடு ஏ.ஈ.டி பள்ளியில் கோகுலாஷ்டமி விழா கொண்டாட்டம்
ஈரோடு ஏ.ஈ.டி. பள்ளியில் குழந்தைகளுக்கு ராதை, கிருஷ்ணன் வேடமிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
ஈரோடு ஏ.ஈ.டி பள்ளியில் கோகுலாஷ்டமி விழா செவ்வாய்க்கிழமை (இன்று) கொண்டாடப்பட்டது.
கலியுக கடவுள் என போற்றப்படும் கிருஷ்ணபரமாத்மா அவதரித்த கோகுலாஷ்டமி தினம், நாளை (செப்.,06) புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாடே விழாக் கோலம் பூண்டுள்ளது. தமிழகத்திலும் கிருஷ்ணஜெயந்தி விழா களை கட்டியுள்ளது. கோயில்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பள்ளிகளில் குழந்தைகளுக்கு ராதை, கிருஷ்ணன் வேட்டுமிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், ஈரோடு ஏ.ஈ.டி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கோகுலாஷ்டமி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கீழ்பவானி பாசன சங்க தலைவர் பெரியசாமி கலந்து கொண்டு, கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் மோகன ராமகிருஷ்ணன், பொருளாளர் தீபா, அறக்கட்டளை உறுப்பினர் பிரித்திவியா கலந்து கொண்டு சிறப்பித்தனர். அறக்கட்டளை உறுப்பினர் ஜெயஹரிணி, ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை கூறி சிறப்புரை ஆற்றினார். மழலையர்கள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்து பாட்டுப்பாடி நடனமாடினர். கோவர்த்தன மலையை கண்முன் நிறுத்தி சிறப்பாக நாடகம் நடத்தினர். கலை நிகழ்ச்சிகளை மாணவிகள் தொகுத்து வழங்கினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu