/* */

அதிசய சொம்பு : விவசாயிடம் பணம் பறிக்க முயற்சி

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கெம்பநாயக்கன் பாளையத்தில் அதிசய சொம்பு எனக்கூறி தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிடம் பணம் பறிக்க முயன்ற நபரை பங்களாபுதூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு திருமலைவாடி பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (29). விவசாயம் செய்து வருகிறார். நேற்று (செவ்வாய்க்கிழமை)அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் ராமச்சந்திரன் வீட்டிற்குச் சென்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கே.என்.பாளையத்தை சேர்ந்த கணேசன் என்பவரிடம் அதிசய சொம்பு ஒன்று உள்ளதாகவும். அந்த சொம்பு அருகே டார்ச் லைட் ஆன் செய்து கொண்டு சென்றால் தானாக லைட் ஆப் ஆகி விடுகிறது எனவே அதனை வாங்கிக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்.

இதில் ஆர்வமடைந்த ராமச்சந்திரன் அதிசய சொம்பை பார்க்க தனது நண்பர்களான முனிரத்தினம், சென்றாயன் சிவாஜி ஆகியோருடன் தனது காரில் சென்றுள்ளார். கணேசன் இவர்களைக் கண்டதும் சொம்பை காட்டி 1 லட்சத்து 50 ஆயிரம் பணம் கொடுத்து பெற்றுக் கொள்ள வற்புறுத்தி இருக்கிறார்.

இதில் ராமச்சந்திரனுக்கு திருப்தி இல்லாததால் அதனை வேண்டாம் எனக்கூறி விட்டு கிளம்ப முயன்றுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த கணேசன் சொம்பை வாங்காமல் சென்றால் காரை ஏற்றிக் கொன்றுவிடுவதாக மிரட்டி தனது காரை எடுத்துக்கொண்டு வேகமாக ஓட்டி வந்துள்ளார்.

இதில் பயந்துபோன ராமச்சந்திரன் தங்கள் வந்த காரை வேகமாக ஓட்டிக்கொண்டு சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரியம்மன் கோவில் அருகே பதுங்கிவிட்டார்.

இதையடுத்து இன்று பங்களாபுதூர் போலீஸ் ஸ்டேசனுக்கு சென்ற ராமச்சந்திரன் சம்பவம் தொடர்பாக புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அத்திக்கவுண்டன் புதூர் அருகே கணேசன் பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து ஏமாற்ற பயன்படுத்திய சொம்பு மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட கணேசனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 28 April 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்