சிறுவலூர் அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

சிறுவலூர் அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

Today erode news in tamil- குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள். 

Today erode news in tamil- கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள சிறுவலூர் பகுதியில், குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

Today erode news in tamil- ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது சிறுவலூர். சிறுவலூருக்கு அருகே எலந்தகாடு என்ற கிராமம் உள்ளது. இங்கு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் வசதி செய்து தருவதற்காக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. இந்நிலையில் குடிநீர் குழாய்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைந்து விட்டது. இதனால் இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக, எலந்தகாடு பகுதிக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.

இதுகுறித்து அப்பகுதி மக்கள், சிறுவலூர் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். ஆனாலும் இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என கூறப்படுகிறது. இதனால், எலந்தகாடு பகுதி மக்கள், குடிநீர் கிடைக்காமல் அவதிபட்டனர்.

இந்நிலையில் இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். அப்பகுதியில் வசிக்கும் மக்கள், குறிப்பாக பெண்கள் காலி குடங்களுடன் ஒன்று திரண்டு திடீரென சிறுவலூர்-கவுந்தபாடி ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெரிசல் ஏற்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் கிடைத்ததும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் போலீசார், சாலை மறியல் நடந்த இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் கிடைக்க, உடனடியாக வழிவகை செய்யப்படும். தாமதமின்றி, குடிநீர் விநியோகம் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இதனையடுத்து சமாதானமடைந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அமைதியாக கலைந்து சென்றனர். முக்கிய ரோட்டில் நடந்த சாலை மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரத்துக்கு மேல், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன்பிறகு அந்த பகுதியில் வாகன போக்குவரத்து சீரானது.

Tags

Next Story