தமிழகத்தில் தடுப்பூசி தயாரிப்பு ஆலைகளை திறக்க திருப்பூர் எம்.பி. கோரிக்கை
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில், திருப்பூர் எம்.பி சுப்புராயன் செய்தியாள ர்கள் சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது:
இந்தியாவில், கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. தலைநகர் டில்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 25 பேர்கள் உரியிழந்துள்ளனர் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை, மருந்து பற்றாக்குறை, படுக்கை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
திடீரென இரண்டாவது அலை தொடங்கிவிடவில்லை. கடந்தாண்டு ஜனவரியில் உலக சுகாதார நிறுவனம் நோய் தொற்று தீவிரம் அடையும் என எச்சரிக்கை விடுத்தது. ஆனால் மோடி அரசு அந்த எச்சரிக்கையை கண்டுகொள்ளாமல் திருவிழாக்களை நடத்தியது. டிரம்பை அழைத்து விழா நடத்தியதால் தான் தொற்று அதிகளவு பரவியுள்ளது.
முன்னெச்சரிக்கை தடுப்புநடவடிக்கைகள் எடுக்காததினால் 100க்கனக்கான பேர்கள் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் ஏற்படும் மரணங்கள் திட்டமிட்டே மறைக்கப்படுகிறது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் 23 ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளனர். பொறுப்புள்ள பதவியில் பொறுப்பற்ற மோடி உள்ளதால்தான் இந்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடிக்கு முதன்முதல் காரணம் மோடி அரசு தான்.
இந்தியா முழுவதும் தடுப்பு மருந்து பற்றாக்குறை அதிகளவு ஏற்பட்டுள்ளது. 6 கோடி தடுப்பு மருந்து 80 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. சொந்த நாட்டில் மக்கள் செத்து மடிக்கின்றனர். மோடி அரசு, ஏற்றுமதிக்கு தடைவிதித்திருந்தால் இந்தியாவில் மருந்து பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது.
சீன நிறுவனத்தின் தடுப்பூசி 150க்கு விற்பனை செய்தாலே நல்ல லாபம் இருப்பதாக அந்த நிறுவனமே சொல்லியுள்ளது. ஆனால் மக்களுக்கு ரூ.400க்கு விற்பனை செய்கின்றனர். தனியார் நிறுவனத்திற்கு வரம்பற்ற அனுமதியை வழங்கி மோடி அரசு வரம்பற்ற செயலாக உள்ளது.
மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். தமிழகத்தில் உள்ள தடுப்பூசி தயாரிப்பு ஆலைகளை திறக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இலவச தடுப்பூசி என்று அறிவிப்பு மட்டுமே உள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் தடுப்பு மருந்து உற்பத்தி செய்வதை போர்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும்.
கொரோனா உயிரிழப்பு குறித்து உண்மையான அறிக்கை வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu