ஈரோடு மாவட்டத்தில் 2ம் நாளாக இன்றும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்

ஈரோடு மாவட்டத்தில் 2ம் நாளாக இன்றும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்
X
ஈரோடு மாவட்டத்தில் இரண்டாம் நாளாக இன்றும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஈரோட்டில் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 4 லட்சத்து 58 ஆயிரத்து 253 பேருக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். தடுப்பூசி போடும் முகாம்களில் நள்ளிரவு முதலே குவிய தொடங்கி விடுகின்றனர். மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் வகையிலும், சிரமமின்றி தடுப்பூசி போடுவதற்காகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுழற்சி முறையில் தடுப்பூசி போடும் பணி கடந்த மாதம் 24-ந் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.

அதன்படி ஈரோட்டில் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் தினசரி சுழற்சி முறையில் தலா 20 வார்டுகள் என தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. புறநகர்ப் பகுதிகளில் சுமார் 110 தடுப்பூசி முகாம்கள் அதிகரிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது போதிய தடுப்பூசி கையிருப்பு இல்லாததால், ஈரோடு மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் நேற்று நிறுத்தி வைக்கப்பட்டன. இரண்டாம் நாளாக இன்றும் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், தடுப்பூசி வந்ததும் நாளை வழக்கம்போல் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil