/* */

ஈரோடு மாவட்டத்தில் இன்று தடுப்பூசி முகாம்கள் ரத்து

ஈரோடு மாவட்டத்தில் இன்று தடுப்பூசி முகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் இன்று தடுப்பூசி முகாம்கள் ரத்து
X

ஈரோட்டில் கொரோனா பரவல் காரணாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு, தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தபட்டுள்ளது. அதேபோல் தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். தடுப்பூசி போடும் முகாம்களில் நள்ளிரவு முதலே குவிய தொடங்கி விடுகின்றனர்.

இதனால், மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் வகையிலும், சிரமமின்றி தடுப்பூசி போடுவதற்காகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுழற்சி முறையில் தடுப்பூசி போடும் பணி கடந்த மாதம் 24-ந் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. அதன்படி ஈரோட்டில் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் தினசரி சுழற்சி முறையில் தலா 20 வார்டுகள் என தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதேபோல் புறநகர்ப் பகுதிகளில் சுமார் 110 தடுப்பூசி போடப்படும் முகாம்கள் அதிகரிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசிகள் கையிருப்புக்கு தகுந்தார் போல் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், தற்போது போதிய தடுப்பூசி கையிருப்பு இல்லாததால், ஈரோடு மாவட்டம் முழுவதும் இன்று தடுப்பூசி முகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நாளை தடுப்பூசி வருகையை பொறுத்து வழக்கம்போல் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

Updated On: 22 July 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  2. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  4. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  5. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  6. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  7. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்
  8. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அறிவாளர் பேரவை வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி...
  10. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...