முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது : அமைச்சர் செங்கோட்டையன்

முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது : அமைச்சர் செங்கோட்டையன்
X
மின்சாரம், சாலை, குழந்தைகளின் கல்வி என அனைத்தையும் இந்த அரசு சிறப்பாக செய்துவருகிறது -பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் 8 முறை வெற்றி பெற்று தற்போது 9வது முறையாக அதிமுக சார்பில் போட்டியிடும் தற்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கடந்த நான்கு தினங்களாக கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீடுவீடாக சென்று வீதிகளில் திறந்த வாகனத்தில் நின்றும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சின்ன பீளமேடு நாகரணை கடத்தூர் கூடக்கரை உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது,

அதிமுக குடும்பதலைவிக்கு மாதம் ரூ.1500, வருடத்திற்கு 6 சிலிண்டர், கல்விக்கடனை அரசே ஏற்றுக்கொள்ளும், விவசாயிகள் பயிர் கடன் தள்ளுபடி போன்ற ஏராளமான திட்டங்களை தேர்தல் அறிகையில் அளித்துள்ளதாகவும், எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் அனைத்து அணைகளும் நிரம்பி வழிந்து கொண்டுள்ளது. நல்லாட்சி பெறுவதற்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டாகும். ஒரு அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு தேவை மின்சாரம். இரண்டாவது தேவை சாலை. மூன்றாவது குழந்தைகள் நல்ல கல்விபெறுவது. இவை அனைத்தையும் இந்த அரசு செய்துவருகிறது. இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்குவதாக பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர். நாம் எந்த திட்டங்களை கேட்டாலும் நிறைவேற்றித் தருகிற பாரத பிரதமராக மோடி உள்ளார். ஆகவே இரண்டும் இணைத்து மத்தியிலும் மாநிலத்திலும் சிறந்த ஆட்சி நடைபெறுவதற்கு அத்தனை பேருடன் உறுதுணையுடன் நடைபெற்றுவருகிறது என பரப்புரையின் போது பொதுமக்களிடம் பேசி வாக்கு சேகரித்தார்.



Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி