வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் மற்றும் சுயேட்சை என 19 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியிலுள்ள 29 மண்டலங்களில் 349 வாக்குச்சாவடிகள் உள்ளது. அதற்காக 419 வாக்குபதிவு இயந்திரங்களும் 838 வேட்பாளர்கள் பட்டியல் இயந்திரங்களும் 471 ஒப்புகைசீட்டு இயந்திரங்களும் வந்துள்ளது.
இவைகளில் வாக்குசாவடிகளுக்கு வேட்பாளர்கள் பெயர்கள் மற்றும் சின்னங்களை பொருத்தும் பணி கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று தொடங்கியுள்ளது.
முன்னதாக வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் சீலை உடைத்து வாக்குபதிவு இயந்திரங்களை வெளியே எடுத்து வந்த பின்னர் இயந்திரங்களுக்கு பேட்டரிகள் பொருத்தப்பட்டு ஒயர்கள் இணைகப்பட்டன. அதன் பின்னர் வாக்காளர்கள் பெயர் மற்றும் சின்னங்களை பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து வேட்பாளர் பெயர்கள் மற்றும் சின்னங்களை பொருத்திய பின்னர் சரியான முறையில் வேலை செய்கிறதா என்று சரி பார்த்த பின்னர் மீண்டும் பெட்டியில் வைத்து சீல் வைக்கப்படும். இப்பணியில் தேர்தல் பணியாளர்கள் , வருவாய்துறையினர், வாக்குச்சாவடி அதிகாரிகள் உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இப்பணியை கோட்டாட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனிதேவி மேற்பார்வையில் நடைபெற்றது. மேலும் இப்பணிகள் இரண்டு நாட்கள் நடைபெறும் என்றும் அதன் பின்னர் பொருட்கள் பிரித்து பேக் செய்யப்படும் என்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu