/* */

தடையை மீறி விநாயகர் சிலையை கொண்டு சென்ற 31 பேர் மீது வழக்குப்பதிவு

ஈரோட்டில் தடையை மீறி பொது இடங்களில் விநாயகர் சிலையை கொண்டு சென்ற இந்து முன்னணி நிர்வாகிகள் உட்பட 31 பேர் மீது வழக்கு பதிவு.

HIGHLIGHTS

தடையை மீறி  விநாயகர் சிலையை கொண்டு சென்ற 31 பேர் மீது வழக்குப்பதிவு
X

பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் கரைக்கப்படும் விநாயகர் சிலைகள்.

கொரோனா தாக்கம் காரணமாக இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதன்படி பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபட அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அதேபோல் ஊர்வலமாக சென்று நீர் நிலைகளில் விநாயகர் சிலையை கரைக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. மக்கள் வீடுகளில் எளிய முறையில் விநாயகர் சிலை வைத்து வழி படலாம் எனவும் அரசு அறிவித்திருந்தது. ஆனால் தடையை மீறி பொது இடங்களில் வைத்து வழி படுவோம் என ஒரு சில அமைப்புகள் தெரிவித்திருந்தன.

இதையடுத்து அந்தந்த மாவட்ட போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஒரு சில இடங்களில் போலீசார் எச்சரிக்கையையும் மீறி பொது இடங்களில் சிலையை வைத்து வழிபட முயன்ற இந்து முன்னணியினர் மற்றும் சில அமைப்புகளை சேர்ந்தவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் தடையை மீறி சென்றவர்கள் மீது வழக்குபதிவு செய்துள்ளது.

சத்தியமங்கலத்தில் தடையை மீறி பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்ய முயன்ற இந்து முன்னணியினர் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் கோபி பஸ் நிலையம் அருகே தடையை மீறி விநாயகர் சிலையை எடுத்துச் சென்ற இந்து முன்னணி நிர்வாகிகள் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நம்பியூர் பகுதியில் இந்து முன்னணி நிர்வாகிகள் 5 பேரும், திங்களூரில் ஒருவரும், வீரப்பன் சத்திரத்தில் ஒருவரும், புஞ்சை புளியம்பட்டியில் 7-க்கும் மேற்பட்டவர்களும், வரப்பாளையம் பகுதியில் 5 பேரும் என மாவட்டம் முழுவதும் 31 பேருக்கு மேற்பட்டவர்கள் மீது தடையை மீறி பொது இடங்களில் விநாயகர் சிலையை கொண்டு செல்ல முயன்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அவர்களிடம் இருந்து விநாயகர் சிலைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் அதே நேரம் ஈரோடு மாவட்டம் முழுவதும் 150 -க்கும் மேற்பட்ட தனியார் இடங்களில் நிர்வாகிகள் விநாயகர் சிலையை வைத்து எளிய முறையில் வழிபட்டனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஆற்றில் சென்று கரைக்கப்பட்டன.

Updated On: 11 Sep 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே பர்கூரில் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து சென்ற...
  4. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  6. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  7. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  8. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  9. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  10. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு