கொடிவேரி அணையில் குளித்து மகிழ்ந்த மக்கள்; விடுமுறை தினத்தில் கொண்டாட்டம்

கொடிவேரி அணையில் குளித்து மகிழ்ந்த மக்கள்; விடுமுறை தினத்தில் கொண்டாட்டம்
X

today erode news in tamil- கொடிவேரி அணை (கோப்பு படம்)

today erode news in tamil- ஞாயிறு தினமான இன்று, கொடிவேரி அணையில் குவிந்த மக்கள், குளித்து மகிழ்ந்து தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

today erode news in tamil- ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொடிவேரி தடுப்பணையில் கொட்டி ஆர்ப்பரித்து செல்கிறது. இந்த கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் தினமும் ஏராளமான சற்றுலா பயணிகள் தடுப்பணைக்கு வந்து செல்கின்றனர்.

மேலும் விழா மற்றும் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து தடுப்பணையில் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களாக கொடிவேரிக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனர். நேற்று சனிக்கிழமை பொது மக்கள் பலர் வந்து அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். இதே போல் விடுமுறை தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை கொடிவேரிக்கு பொதுமக்கள் அதிகளவில் வந்தனர். காலை நேரத்தில் கூட்டம் குறைந்து காணப்பட்டாலும் நேரம் செல்ல, செல்ல மக்களின் கூட்டம் அதிகளவில் இருந்தது.

ஈரோடு, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, கரூர் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் இன்று ஏராளமான பொதுமக்கள் கொடிவேரிக்கு தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர். இதை தொடர்ந்து சிறுவர், சிறுமிகள், ஆண்கள், பெண்கள் என பலர் அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் இளைஞர்கள் பலர் வந்து குளித்து குதூகலித்தனர். இதையடுத்து பொது மக்கள் தாங்கள் கொண்டு வந்த உணவு வகைகள், வெளிப்பகுதியில் விற்பனை செய்யப்படும் மீன்களையும் ருசித்து விட்டு சென்றனர்.

இதே போல் சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகருக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொது மக்கள் பலர் வந்திருந்தனர். இதைத் தொடர்ந்து குடும்ப த்துடன் வந்திருந்த மக்கள் அணை பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர். மேலும் சிறுவர் மற்றும் சிறுமிகள் பூங்காவில் ஊஞ்சல் விளையாடி களித்தனர். பெண்கள் பலர் சறுக்கு விளையாடி இயற்கையை ரசித்து சென்றனர். இதே போல் அணையில் கொட்டும் தண்ணீரின் அழகை ரசித்தனர். இதனால் இன்று பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings