அமைச்சர் செங்கோட்டையன் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றினார்

அமைச்சர் செங்கோட்டையன் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றினார்

தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தேர்தல் வாக்குபதிவு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் 9வது முறையாக போட்டியிடும் வேட்பாளரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன். இவர் தனது சொந்த கிராமமான குள்ளம்பாளைம் அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்து ஜனநாய கடமையாற்றினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கோபிசெட்டிhளையம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அனைத்து திட்டங்ளும் நிறைவேற்ற நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வெற்றி குறித்த கேள்விக்கு மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பாக கருதுகிறோம் என்றும் தோப்பு வெங்கடாசலத்தின் குற்றச்சாட்டிற்கு நான் அவர் பெயரை குறிப்பிட்டு சொல்லவில்லை சென்னிமலையே பாதி காணவில்லை முருகா நீயோ பார்த்துக்கொள் என்பதை மட்டுமே குறிப்பிட்டேன்.

யாரையும் குறிப்பிட்டு குற்றம்சாட்டவில்லை என பதிலளித்தார். அதனை தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் ஜெயராம் நடுநிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் சிட்கோ வாரியத்தலைவர் சிந்து ரவிச்சந்திரன் வாக்களித்தர்…

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி