கோபி அருகே கட்டப்பட்டு வரும் புதிய தடுப்பணைகள் : எம்எல்ஏ ஆய்வு
கோபிசெட்டிப்பாளையத்தில் அமைக்கப்பட்டு வரும் தடுப்பணைப் பணிகளை எம்எல்ஏ செங்கோட்டையன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து வரும் நீரானது கோபிச்செட்டிபாளையம் அருகேயுள்ள கொடிவேரி அணையில் தேக்கி வைக்கப்படும்.
பின்னர் அங்கிருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன பகுதிகளுக்கு திறந்துவிடப்படும். இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.81 கோடி மதிப்பீடடில் ஆலத்துகொம்பை, பேய்அணை, வாணிப்புத்தூர், ஜம்பை உள்ளிட்ட 7 இடங்களில் புதிய தடுப்பணைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து அதற்க்கான பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.
இதில் ஒன்றான காசிபாளையம் வழியாக செல்லும் ரூ.15 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பேய் அணையை கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினரும்,முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்க தடுப்பணை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார். இந்த தடுப்பணை கட்டப்படுவதன் மூலம் அரக்கன்கோட்டை பாசன பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu