டீக்கடைக்காரர் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை: 32 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் கொள்ளை

டீக்கடைக்காரர் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை: 32 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் கொள்ளை
X

கொள்ளையடிக்கப்பட்ட வீட்டில் ஆய்வு செய்த கைரேகை நிபுணர்கள். 

கோபிசெட்டிபாளையம் அருகே டீக்கடைக்காரரின் வீட்டில் 32 பவுன் நகை மற்றும் ரூ.60 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மின் நகர் பகுதியை சேர்ந்தவர் துரைராஜ். இவர் கோபி நீதிமன்றம் அருகே தேநீர் கடை நடத்தி வருகின்றார். இந்நிலையில் நேற்று காலை துரைராஜ் தனது மனைவி மற்றும் மகனுடன் வெளியூர் சென்று விட்டு இரவு 8 மணிக்கு தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்துள்ளதை கண்டு அதிர்சியடைந்துள்ளார். மேலும் வீட்டின் பின்பக்க கதவு உடைந்த நிலையில் இருந்துள்ளது.

இதையடுத்து படுக்ககையறைக்கு சென்று பார்த்த போது அங்கு அலமாறி உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 32 பவுன் தங்கநகை மற்றும் 60 பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கோபிச்செட்டிபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கு உடைக்கப்பட்ட நிலையில் இருந்த பீரோ மற்றும் கதவுகளை பார்வையிட்டனர். பின்னர் கைரேகை நிபுணர்கள் மற்றும் போலீஸ் மோப்ப நாய் வரவழைத்து கொள்ளையர் விட்டுச்சென்ற தடயங்களை சேகரித்தனர். இதையடுத்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். கோபியில் பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!