அத்திகடவு அவிநாசி திட்ட பணிகள் 4 மாதங்களில் முடிக்கபடும: செங்கோட்டையன்

அத்திகடவு அவினாசி திட்ட பணிகளை எம்எல்ஏ செங்கோட்டையன் பார்வையிட்டார்.
ஈரோடு, திருப்பூர், கோவை, உள்ளிட்ட மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கிடவும் மழைக்காலங்களில் பவானி ஆற்றில் அதிகப்படியான நீர் உபரியாக வீணாகி வருவதை தடுத்திடும் வகையிலும் அத்திகடவு அவிநாசி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதன்படி நீண்ட காலமாக நிலுவையில் இருந்த அத்திகடவு அவிநாசி திட்டம் அமல்படுத்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி 32 பொதுப்பணித்துறை குளங்கள், 42 ஊராட்சி ஒன்றிய குளங்கள் மற்றும் 971 குளம் குட்டைகளில் தண்ணீர் நிரப்ப ரூ.1,652 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன்படி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள வரப்பாளையம் பகுதியில் அத்திக்கடவு அவிநாசி திட்ட நீரேற்று நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.
இதில் 2.65 ஏக்கர் பரப்பளவில் 349 குளங்கள் பயன்பெறும் வகையில் 8 மின்மோட்டர் பம்புகள்,40 லட்சம் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டி,மின்மாற்றி வளாகம்,அலுவலக கட்டிடம்,பாதுகாவலர் அறை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை இன்று முன்னாள் அமைச்சரும் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான செங்கோட்டையன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், அத்திகடவு அவிநாசி திட்ட பணிகள் இன்னும் 4 மாதங்களுக்குள் முடிக்கபட்டு ஏரி,குளங்களுக்கு தண்ணீர் நிரப்பப்படும் என்றும் இதன்மூலம் வறட்சி பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு விவசாயம் செழிக்கும் என்றும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu