பவானி ஆற்றுக்கு துணி துவைக்க சென்ற விவசாயி மாயம்

பவானி ஆற்றுக்கு துணி துவைக்க சென்ற விவசாயி மாயம்
X

பவானி ஆறு.

கோபி அருகே பவானி ஆற்றுக்கு துணி துவைக்க சென்ற விவசாயி மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த மேவானியை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 44). நந்தகுமார் விவசாயம் செய்து வந்தார். மேலும் அவ்வபோது கதிர் அடிக்கும் எந்திரம் தொடர்பான வேலைக்கு தினக்கூலி அடிப்படையில் சென்று வந்தார். இந்நிலையில் நந்தகுமார் பழனி முருகன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி நந்தகுமார் ஊரில் உள்ள பவானி ஆற்றுக்கு சென்று துணி துவைத்து வருவதாக கூறிவிட்டு சென்றார்.

ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது உறவினர்கள் பவானி ஆற்றுக்கு வந்து தேடி பார்த்தனர். அப்போது நந்தகுமார் துணிகள் மடடும் ஆற்றங்கரையோரம் இருந்தது. நந்தகுமாரை தேடிப் பார்த்தும் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. துணி துவைக்கும் போது ஆற்றில் தவறி விழுந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டாரா அல்லது வேறு எங்கும் சென்றாரா என தெரியவில்லை. இதுகுறித்து கோபி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நந்தகுமாரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture