கோபி அருகே மின் வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு.
கொங்கர்பாளையத்தில் தனியாருக்குச் சொந்தமான விவசாய தோட்டத்தில் மின் வேலியில் சிக்கிய ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் அடுத்துள்ள டி.என்.பாளையம் வனச்சரகத்திற்க்கு உட்பட்ட பகுதிகளில் யானை,மான்,சிறுத்தை,பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றது.
இப்பகுதிகளில் கரும்பு, சோளம், வாழை, நெல், குச்சி கிழங்கு உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
இங்குள்ள விவசாய நிலங்களில் வன விலங்குகள் அடிக்கடி உள்ளே புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. அதன் காரணமாக தோட்டத்தை சுற்றி விவசாயிகள் கம்பி வேலி அமைத்து பாதுகாத்து வருகின்றனர், இந்த நிலையில் கொங்கர்பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் 35 வயது மதிக்கதக்க ஆண் யானை ஒன்று புகுந்துள்ளது. அப்போது அங்கு போடப்பட்ட மின் வேலியில் சிக்கிய அந்த ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இச்சம்வவம் குறித்து தகவல் அறிந்து வந்த டி.என்.பாளையம் வனத்துறையினர் யானை உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்க்கொண்டுள்ளனர். மேலும் உயிரிழந்த யானையை உடற்கூறு பரிசோதனை செய்வதற்காக சத்தியமங்கலம் புலிகள் காப்பக மருத்துவர் அசோகன் வரவழைக்கப்பட்டார்.
இதையடுத்து வனத்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தோட்டத்தை யானைகள் சேதபடுத்த கூடாது என்பதற்காக தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள மின் வேலியில் உயர் மின்னழுத்தம் செலுத்தப்பட்டது தெரிய வந்ததது.
மேலும் வனத்தை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள அகழி, மழையினால் சேதமடைந்து மூடிவிட்டதால் காட்டு விலங்குகள் எளிதாக விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடுவதாகவும், அதனை சரி செய்ய வனதுறைக்கு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu