கோபி அருகே ட்ரோன் கேமரா மூலம் 855 சாராய ஊறல் கண்டுபிடிப்பு!

கோபி அருகே ட்ரோன் கேமரா மூலம், மதுவிலக்கு போலீசார் மேற்கொண்ட தீவிர கண்காணிப்பில், 855 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் சாராயம் காய்ச்சப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் தசையன்காடு, எம்மாம்பூண்டி, சோளக்காடு, மீன்குட்டை, எம்.ஜி.ஆர் நகர், ராயர்பாளையம் சுற்றியுள்ள பகுதிகளில் மதுவிலக்கு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின்போது ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து, முட்புதர்களுக்கு அடியில் 10 இடங்களில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவதற்கு தயார் நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சாராய ஊறல்கள், சுமார் 855 லிட்டர் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சாராய ஊறல்களை கைப்பற்றிய போலீசார் அதனை கீழே கொட்டி அழித்தனர்.

மேலும் சாராயம் காய்ச்சியதில் தொடர்புடையர்கள் குறித்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு, வரும் காலங்களில் ராயர்பாளையத்தில் தொடர்ந்து 24 மணி நேரமும் ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் 10 காவலர்கள் அங்கேயே பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும், ட்ரோன் கேமரா மூலமாக தொடர்ந்து அப்பகுதிகள் கண்காணிக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!