கொடிவேரி அணையில் ஆர்ப்பரித்து ஓடும் நீர் : சுற்றுலா பயணிகள் வரத்தடை
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை, ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய மண் அணை என்ற புகழைப் பெற்றுள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு, 105 கன அடியாகும். நீலகிரி மாவட்டத்தில் பெயனது வரும் தொடர் மழை காரணமாக, பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது.
இதனால் அணைக்கு வரும் உபரி நீர் 6700 கன அடி தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த உபரி நீர் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணைக்கு வந்தடைந்ததுள்ளது. அணையில் உள்ள தடுப்பு கம்பிகளை தாண்டி நீர் ஆர்பரித்து கொட்டி வருவதால், அணைக்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக, பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், அணையில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவின்படி கொடிவேரி அணைக்கு இருபுறமும் சுற்றுலா பயணிகள் செல்லாதவாறு கடத்தூர் மற்றும் பங்களாபுதூர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் சவுண்டபூர், மேவானி, கீழ்வானி, கூகலூர், அரக்கன்கோட்டை, அம்மா பாளையம், கள்ளிப்பட்டி, அத்தாணி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கரையோர மக்கள் குளிக்க, துணி துவைக்க, மீன் பிடிக்க,கால்நடைகள் மேய்க்க செல்ல வேண்டாம் எனவும் ஒலி பெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆற்றில் நீர் பெருக்கெடுத்து வருவதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் அறிவுறுத்தபட்டு வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu