கவுந்தப்பாடி சொசைட்டி: நாட்டு சர்க்கரை, உருண்டை வெல்லம் கொள்முதல் செய்த பழநி தேவஸ்தானம்

கவுந்தப்பாடி சொசைட்டி: நாட்டு சர்க்கரை, உருண்டை வெல்லம் கொள்முதல் செய்த பழநி தேவஸ்தானம்
X

பைல் படம்.

கவுந்தப்பாடி சொசைட்டியில் நாட்டு சர்க்கரை, உருண்டை வெல்லத்தை ரூ.17 லட்சத்துக்கு, பழநி கோவில் தேவஸ்தானம் கொள்முதல் செய்தது.

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நாட்டு சர்க்கரை ஏலம் நேற்று நடந்தது. இதில், 60 கிலோ மூட்டை, 2,550 ரூபாய் முதல், 2,640 ரூபாய் வரை விலைபோனது. வரத்தான, 700 மூட்டைகளில், 649 மூட்டைகளை, பழநி தண்டாயுதபாணி கோவில் தேவஸ்தான நிர்வாகத்தினர் கொள்முதல் செய்தனர். இதேபோல், உருண்டை வெல்லம், 25 மூட்டை வரத்தானது. ஒரு மூட்டை, 1,350 ரூபாய்க்கு விற்பனையானது. நாட்டு சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லத்தை, 17.07 லட்சம் ரூபாய்க்கு பழநி தேவஸ்தானம் வாங்கியதாக விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!