தலையில் தண்ணீர் குடத்துடன் வந்த சுயேட்சை வேட்பாளர்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிறுவலூரை சேர்ந்தவர் குமார். இவர் அங்குள்ள இரும்பு பட்டரை ஒன்றில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாண்டியாறு - புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற கோரி திருப்பூர் தொகுதியில் போட்டிட்டு 1400 வாக்குகளை பெற்றார். வரும் சட்டமன்ற தேர்தலிலும் இதே கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியின் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து தலையில் தண்ணீர் குடத்துடன் இரு சிறுவர்களுடன் நடைபயணமாக கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அலுவலகம் வரை சென்ற பின் தேர்தல் நடத்தும் அலுவலர் பழனிதேவியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். சுயேட்சை வேட்பாளர் ஒருவர் தலையில் தண்ணீர் குடத்துடன் வேட்புமனுவை தாக்கல் செய்ய நடை பயணமாக சென்றதை பொதுமக்கள் ஆச்சர்யத்துடனும் அதியத்துடனும் பார்த்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu