கோபிச்செட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு

கோபிச்செட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு
X

ஈரோடு மாவட்டம்,கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கோபிச்செட்டிபாளையத்தில் அரசு மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணன் உன்னி ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2-ம் அலை வேகமாக பரவி வருகிறது.தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறையினர், போர்க்கால அடிப்படையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முதலில் ஈரோடு நகரப்பகுதியில் வேகமாக பரவி வந்த தொற்று பின்னர் கிராமப்புற பகுதியில் குடும்பம் குடும்பமாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225 கிராம ஊராட்சிகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கிராம செயலாளர்கள்,சுகாதாரத் துறையினர், போலீசார், தன்னார்வலர்கள் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோபிச்செட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு நடைவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் கிருஷ்ணன் உன்னி ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது தொற்று பரவாமல் இருக்க மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் மருந்துகள் இருப்பு உள்ளிட்டவற்றை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இதனையடுத்து கோபிச்செட்டிபாளையத்தில் தனிமை படுத்தப்பட்ட பகுதிகளில் மேற்கொண்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அரசின் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது உதவி ஆட்சியர் (பயிற்சி) ஏகம் ஜெ.சிங் , கோபிச்செட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் பழனிதேவி உட்பட பலர் இருந்தனர்.

Tags

Next Story
ai marketing future